Wednesday, 16 November 2011

ஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள்



ஒரு சார்பாக - தமிழ் ஈழ விடுதலை அரசு பிரகடனம் செய்வதற்கு சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் செயல்திட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக - அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்து - விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகார பூர்வமானதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை என்றாலும் இத்தகைய ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந் துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத்  தகவல்கள்:

கொரியா
ஜப்பானிய காலனி ஆதிக்கத்தின் கீழ் கொரியா இருந்த காலத்தில் கொரிய தேசியம் ஒடுக்குமுறைக்குள்ளானது. கொரிய மொழி, கலாச்சாரம் சிதைக்கப்பட்டன. கொரியாவின் கலாச்சார சொத்துகள் ஜப்பானால் சூறை யாடப்பட்டன. 1900களின் தொடக்கத்தில் கொரிய விடுதலை இயக்கங்கள் வீச்சோடு எழுந்தன. 1919 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உட்ரோ உல்சன், பாரி° அமைதி மாநாட்டில் சுய நிர்ணய உரிமை தொடர்பாக ஆற்றிய உரையானது கொரிய மாணவர்கள் மத்தியில் விடுதலைக் கிளர்ச்சியைத் தீவிரமாக்கியது. அத்தகைய எழுச்சிகளுடன் மார்ச் 1 இயக்கம் என்ற இயக்கமும் தீவிரமாக களத்தில் இறங்கியது. மார்ச் 1919 ஆம் நாளன்று கொரி யாவின் 33 தேசியவாதிகள் ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தைவெளியிட்டனர். 12 மாதங்களில் இந்தப் போராட்டத்தை ஜப்பானிய ஆதிக்க அரசு ஒடுக்கியது. இந்தப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்த வலி யுறுத்தி 1500 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. 20 இலட்சம் கொரியர்கள் இவற்றில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் ஏறத்தாழ 7500 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சுதந்திரப் பிரகடனமே கொரியாவின் விடுதலைக்கும் வித்திட்டது என்று வரலாற்றா சிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

லிதுவேனியா
ஜெர்மனிய துருப்புகள் தனது நாட்டில் நிலை கொண்டிருந்தபோதும் 1918 ஆம் ஆண்டு லிதுவேனியா சுதந்திர நாடாக பிரகடனம் வெளியிட்டு ஜனநாயக கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. அதன் பின்னர் லிதுவேனியா சோவியத் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. 1990களில் சோவியத் ஒன்றியம் வீழ்ந்தபோது சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட முதலாவது நாடு லிதுவேனியாவாகும்.

பிரகடனத்துக்குப் பின்னர் கொரில்லா யுத்தம் நடத்திய பிலிப்பைன்ஸ்
1898 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாளன்று °பெயினின் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக பிலிப்பைன்ஸ் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. ஆனால், பிலிப்பைன்சின் ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்காவும் °பெயினும் இதனை ஏற்க மறுத்தன.
1898 ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் செப்டம்பர் 10 வரை முதலாவது தேர்தல்கள் நடத்தப்பட்டன. பிலிப்பைன்சின் அரச தலைவராக அகுனல்டோ தெரிவு செய்யப் பட்டார். முதலாவது பிலிப்பைன்ஸ் குடியர சானது 1899ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதனிடையே அமெரிக்காவுக்கும் °பெ யினுக்கும் இடையேயான ஒப்பந்தம் ஒன்றின் மூலம் °பெயின் வெளியேறிவிட பிலிப்பைன்சில் அமெரிக்கா நின்றது.
1899 ஆம்ஆண்டு அமெரிக்காவும் பிலிப் பைன்° குடியரசுக்கும் இடையே யுத்தம் வெடித்தது.
இந்த யுத்தத்தின்போது இடைக்கால உத்தியாக பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ, கொரில்லா போர் முறையை கடைபிடிக்க தெரிவு செய்தார். அமெரிக்க இராணுவத்துக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப் பட்டது. 1901 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ, சில துரோகி களால் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் 1901 ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் அமெரிக்காவின் அரசாட்சியை ஏற்பதாகவும் தனது படையினரின் ஆயுதங்களை ஒப்படைப்ப தாகவும் அகுனல்டோ அறிவித்தார். அதன் பின்னரும் பிலிப்பைன்ஸ் விடுதலைக்கான யுத்தம் நடைபெற்றது.
1935 ஆம் ஆண்டு பிலிப்பைன்சுக்கு அரைவாசி சுயாட்சி உரிமை அளித்த அமெரிக்கா, 1946 ஆம் ஆண்டு முழு சுதந்திரம் அளித்தது.
1898 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுதந்திரப் பிரகடனம் ஏற்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் மக்கள் இன்றளவும் சுதந்திரப் பிரகடன நாளை கொடி நாளாககடைபிடித்து வருகின்றனர்.

ஐ.நா. உருவான பின்னர்: வியட்நாம்
1887 இல் தென் கிழக்கு ஆசியாவில் வியட் நாம், கம்போடியா, லாவோ° உள்ளிட்ட பகுதிகளை இணைத்து பிரெஞ்ச் இந்தோ சீனா என்கிற ஒன்றியம் உருவாக்கப் பட்டது.
இரண்டாம் உலகப் போரின்போது இந்தோ சீனத்தில் இருந்த டொன்கின் பகுதியை ஜப்பான் பயன்படுத்த பிரான்சு அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து ஒட்டு மொத்த இந்தோ சீனா ஒன்றிய ஆளுகையை ஜப்பான் கைப்பற்றியது. 1945 ஆம் ஆண்டு ஆக°ட் மாதம், ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்படும் நாள் வரை இந்த ஆதிக்கம் நீடித்தது.
இந்நிலையில் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் நாளன்று வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை ஹோசிமின் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு படையினருக்கும் வியட்நாமியர் களுக்கும் இடையே மோதல் உருவானது.
1946 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் நாளன்று பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீன கூட்டமைப்பில் வியட்நாம் ஒரு சுயாட்சி பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது. வட வியட்நாமில் நிலை கொண்டிருந்த சீன இராணுவத்தை வெளியேற்றும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சீனப் படை வெளியேறிய உடன் மோதல் மூண்டது. ஹோசிமின் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தப்பினார்.
1950 ஆம் ஆண்டு மீண்டும் வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார்.
அதே ஆண்டுகளில் ருசியாவின் °டாலின் மற்றும் சீனாவின் மாவோவை ஹோசிமின் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் சோவியத் ருசியா மற்றும் சீனாவினால் வியட்நாம் அங்கீகரிக்கப்பட்டது.
கொரில்லா போர் முறை மூலம் பிரெஞ்சுப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வட வியட்நாமிலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற வியட்நாமிய குடியரசுப் பிரக டனம் செய்யப்பட்டது. தென் வியட்நாமில் பிரெஞ்சு, பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் நிலை கொண்டிருந்தன. 1954 ஆம் ஆண்டு அப்பிராந்தியத்திலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற அமெரிக்காவின் தலையீடு தொடங்கியது. அதுவே வியட்நாம் போருக்கும் வழி வகுத்தது.
இஸ்ரேல்
1947 ஆம் ஆண்டு பால°தீனை இரண்டாகப் பிரித்து இ°ரேலை உருவாக்க அனைத்துலக நாடுகள் தீவிரம் காட்டின. இதனை அரபு லீக் எதிர்த்த நிலையில் 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இ°ரேல், ஒரு தலைபட்ச பிரகடனத்தை அறிவித்தது. இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்ட 11 ஆவது நிமிடத்தில் அமெரிக்கா இப் பிரகடனத்தை அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து கௌதமாலா, நிக்கரகுவா, ஊருகுவே ஆகிய நாடுகள் அங்கீகரித்தது. மே 17 ஆம் நாள் சோவியத் ருசியா, இஸ்ரேலை அங்கீகரித்தது. அதன் பின்னர் பல நாடுகள் இ°ரேலை அங்கீகரித்தன.

பாலஸ்தீன்
1988 ஆம் ஆண்டு பால°தீன் விடுதலை இயக்கத்தின் சட்டவாக்க அமைப்பான பால°தீன தேசிய சபையானது பால°தீன சுதந்திரப் பிரகடனத்தை ஒருதலைபட்சமாக அல்ஜைரில்வெளியிட்டது. மேலும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் எந்த ஒரு பாலஸ்தீன பிரதேசமும் இருக்க வில்லை. பாலஸ்தீனப் பகுதிகளில் ஒரு நடைமுறை அரசாங்கத்தைஅது கொண்டிருக்கவில்லை. தொடக்கத் தில் பாலஸ்தீனத்தை ஐ.நா. அங்கீகரிக்க வில்லை. ஆனால் அரபு நாடுகள் அங்கீ கரித்தன. பால°தீன அரசாங்கத்தை அங்கீகரிக்காத போதும் ஓஸ்லோ ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் பாலஸ்தீன நிர்வாக சபையுடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஹமாஸ் இயக்கம், ஜனநாயக முறைப்படியான தேர்தலில் பாலஸ்தீனத்தில் வெற்றி பெற்ற போதும் பல்வேறு நாடுகள் அதனை அங்கீகரிக்க மறுத்தன. நிதி உதவிக  நிறுத்தப்பட்டன. ஹமாசின் ஆட்சி யும் கவிழ்க்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

சோமாலிலாந்த்
அனைத்துலகத்தினால் அங்கிகரிக் கப்பட்ட சோமாலியாவின் தெற்குப் பகுதியில் ஏடன் கடற்பரப்பை யொட்டி சோமாலிலாந்த் என்ற பெயரில் நிழல் அல்லது நடைமுறை சுதந்திரக் குடியரசுபிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாளன்று சோமாலியாவிலிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்ததாக அந்நாட்டு மக்கள் பிரகடனம் செய்தனர். இதனை அனைத்துலக சமூகமோ பிறநாடுகளோ இதுவரை அங்கீகரிக்கவில்லை.
இதனது எல்லைகளாக மேற்குப் பகுதியில் டிஜிபௌட்டி, தென் பகுதியில் எத்தியோப்பியா, கிழக்கில் சோமாலியா என பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மொத்த மக்கள் தொகை 3.5 மில்லியனாகும்.
1884 ஆம் ஆண்டில் சோமாலி லாந்த், பிரித்தானியாவின் ஆக்கிரமிப் புக்குள்ளானது. 1898 ஆம் ஆண்டு வரை பிரித்தானிய இந்தியாவில் சோமலிலாந்த் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 1905 ஆம் ஆண்டு காலனி அலுவலகம் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் பிரித்தானியாவிடமிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்தது. ஆனால் 5 நாட்களுக்குப் பின்னர் 1960 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் நாள் இத்தாலி ஆக்கிரமித்தது. பிறகு சோமாலிலாந்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதுவும் பிரித்தானிய சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு இன்றைய சோமா லியா நாடு உருவாக்கப்பட்டது.
இப்புதிய சோமாலியாவில் தமது இன மக்களது அபிலாசைகள் நிறை வேற்றப்படவில்லை என்று முன்னைய பிரித்தானிய சோமாலிலாந்த் மக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் 1980களில் சோமாலியாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. 1991 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் காங்கிர°, சோமாலியாவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது.
1994 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் மத்திய வங்கி உருவாக்கப்பட்டது. சோமாலிலாந்தின் தேசியக் கொடி 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாளில் சோமாலிலாந்த் அரசியல் சட்டம் மக்களின் வாக்கெடுப்பின் மூலம் ஏற்கப்பட்டது.
சோமாலிலாந்த் அரசியல் சட்டப் படி, சோமாலிய மொழி ஆட்சி மொழியாகும். பாடசாலைகளிலும், மசூதிகளிலும் அரபி மொழி பயன் படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஆங்கில மொழி கற்பிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி மற்றும் எத்தியோப்பியாவில் அறிவிக்கப்படாத தூதரகங்களையும் சோமாலிலாந்த் உருவாக்கியுள்ளது. 20-க்கும் மேறபட்ட அமைச்சுப் பொறுப்புகள் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாத நடைமுறை அரசாங்கம் இயங்கி வருகிறது.
பெல்ஜியம், கானா, தென்னாப் பிரிக்கா, சுவீடன், ருவாண்டா, நார்வே, கென்யா, அயர்லாந்து ஆகிய நாடுகளிடனும் சோமாலிலாந்த் அரசி யல் உறவுகளைப் பேணி வருகிறது.
2007 ஆம் ஆண்டு சனவரி 17 ஆம் நாளன்று சோமாலிலாந்துடன் இணைந்து செயற்படுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் சோமாலிலாந்த் சென்றனர்.
அதேபோல் ஆப்பிரிக்க ஒன்றியத் தின் பிரதிநிதிகளும் 2007 ஆம் ஆண்டு சனவரி 29 மற்றும் 30 ஆகிய நாள்களில் சோமாலிலாந்துக்கு பயணம் மேற் கொண்டனர்.
எத்தியோப்பியாவின் பிரதமர், 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோமா லிலாந்த் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அரசு தலைவர் ககினைச் சந்தித்து உரையாடினார்.
சோமாலிலாந்த்தை ஆப்பிரிக்க ஒன்றியம் அங்கீகரிக்க மறுக்கும் நிலையில் எத்தியோப்பியா, சோமாலி லாந்துக்கான அங்கீகாரத்துக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  

கோவை இராமகிருட்டிணன் கருத்து.

Tuesday, 15 November 2011

தமிழ் மொழியின் பரிணாமம்


கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000


நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.


மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.



கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.


கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்

இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.


குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)


கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527

மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270

மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4

ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.